மைசூர் ரசம் முதல் வேப்பம்பூ ரசம் வரை...

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ:  லக்ஷ்மி வெங்கடேஷ்

தென்னாட்டுச் சமையலில் மிக முக்கிய இடம்வகிக்கும் ரசத்தின் பல்வேறு வகைகளைத் தயாரிக்க தேவைப்படும் பொடிகளை எப்படிச் செய்வது என்று சென்ற இதழில் பார்த்தோம். அந்தப் பொடிகளைப் பயன்படுத்தி ஊரைக்கூட்டும் மணத்தில், சொக்கவைக்கும் சுவையில் விதம்விதமான ரசங்களைச் செய்து அசத்துவோம்... வாருங்கள்! 

மைசூர் ரசம்

தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், தக்காளி -  2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மைசூர் ரசப்பொடி - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்து மசித்த துவரம்பருப்பு, பருப்பு வேகவைத்த நீர், மைசூர் ரசப்பொடி, வெல்லம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,  பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick