ராசி பலன்கள் | Astrology Predictions - Aval Vikatan | அவள் விகடன்

ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

மேஷம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வது நல்லது. 

வியாபாரம்:
அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகம்:
முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.


ரிஷபம்: பழைய கடனொன்றை பைசல் செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரம் வேண்டாம்; நிதானம் தேவை.

வியாபாரம்: புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத் தைப் பெருக்குவீர்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகம்: அலுவலகச் சூழ்நிலை அமைதி யாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick