ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஏப்ரல் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

மேஷம்: பிரச்னைகளைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடலாம். 

வியாபாரம்: புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகம்: எந்த விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.

`தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பது நல்லது.


ரிஷபம்: உங்களின் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உடற்சோர்வு நீங்கும்; உற்சாகம் பிறக்கும். ஓரளவு பணம் வரும். வீடு, வாகன வசதிகள் பெருகும். வீண்செலவு, காரிய தாமதம் ஏற்படும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். உறவினர்களிடம் பழகும்போது கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரம்: கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகம்: விமர்சனங்கள் தலைதூக்கும்.

 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick