ஸ்வீட் சர்ப்ரைஸ்! - இவானா

இவள் யாரோ? சனா

‘`பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளா. ஆனா, தமிழ் நல்லா பேசுவேன். காரணம், இயக்குநர் பாலா சார். ‘நாச்சியார்’ ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்குன்னு தனியா தமிழ் கிளாஸ் ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்ல மலையாளம், ஆங்கிலத்துல பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலேயே நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்!’’ -  மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார், இவானா. 

‘`இப்போதான் ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடிச்சேன். இதோ... ரிசல்ட் பார்த்துட்டு  மங்களூருக்கு ஒரு ஹாலிடே ட்ரிப். அப்புறம் சென்னைக்கு வரணும்னு ரொம்ப ஆசை. ஏன்னா, எனக்கு சென்னையிலதான் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ‘நாச்சியார்’ படம் ரிலீஸான நேரத்துல என்னை எங்கே பார்த்தாலும் தமிழ் ஆடியன்ஸ் அடையாளம்கண்டு பேசினாங்க. அவங்களுக்காகவே சீக்கிரம் இன்னொரு தமிழ்ப் படத்துல நடிக்கணும். நல்ல கதைக்காகக் காத்திருக்கேன்” என்கிற இவானா, நடிப்போடு படிப்பையும் தொடர விரும்புகிறார். அம்மா குடும்ப நிர்வாகி. அப்பா பிசினஸில் இருப்பதாலோ என்னவோ, இவர் படித்ததும் காமர்ஸ் பாடம்தான்.

``நடிப்பு, படிப்பு... ரெண்டையும் நான் பேலன்ஸ் பண்ண உறுதுணையா இருப்பது என் குடும்பம்தான். குழந்தை நட்சத்திரமா மலையாளப் படத்தில் அறிமுகமானேன். இதுவரை மூணு மலையாளப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ்ல எனக்குக் கிடைச்ச வரவேற்பு அதிகம். அதோடு, தமிழ்லதானே ஹீரோயினா அறிமுகமாகியிருக்கேன்? நான் பாலா சார் படத்துல நடிச்சதுல எங்க அப்பாவுக்கு ரொம்ப ஹாப்பி. அவர் பாலா சாரின் தீவிர ரசிகர். கதைகூடக் கேட்காம, சென்னைக்கு அனுப்பி வெச்சார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!