எல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க!

கேமரா கவிஞர்கள் மா.பாண்டியராஜன், படம் : ஜெ.வேங்கடராஜ்

கேமராவுக்கு முன் நடிகைகளாகப் பல பெண்களைப் பார்த்திருந்தாலும், டெக்னிக்கல் டீம்களில் சில பெண்களைப் பார்ப்பதே அரிது. தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுத் துறையில் புதிய பெண்கள் வந்திருக்கிறார்களா என விசாரித்ததில் `ஹலோ' சொன்னார்கள் பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், நிரவ்ஷாவின் உதவியாளர்கள் யாமினி மற்றும் சரண்யா.

``விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சதுக்கு அப்பறம் 9 டூ 5 ஜாப் பார்த்துட்டிருந்தேன். பார்ட் டைம் வொர்க்கா போட்டோகிராபி பண்ணினேன். ஒருகட்டத்துக்கு மேல 9 டூ 5 ஜாப் எனக்கு செட்டாகாதுனு தோணுச்சு. பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட வேலைக்குச் சேரலாம்னு நான் எடுத்த படங்களை சாருக்கு அனுப்பி வெச்சேன். பி.சி சார் ஆபீஸ் வாசல்ல ரெண்டு வருஷமா நின்னு வேலை கிடைக்காதவங்களும் இருக்காங்க; ரெண்டு நாள் நின்னு வேலை கிடைச்சவங்களும் இருக்காங்க. அவர் சிபாரிசு பார்த்து யாரையும்  சேர்க்க மாட்டார். அவருக்கா தோணணும். அப்படி அவருக்கு தோணிணதும் என்னை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். அக்‌ஷய் குமார் நடிச்ச `பேட்மேன்’, ஒரு தெலுங்கு, ஒரு மலையாளப் படம், இப்போ மிஷ்கின் சார் பட வேலைகள்... இப்படி ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு’’ என்று தன் அறிமுகப்படலம் முடிக்கிறார்
யாமினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick