பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! - பத்மா பார்த்தசாரதி

நீங்களும் செய்யலாம்சாஹா, படங்கள் : கே.மணிவண்ணன்

முத்து, மணி, கற்கள் என எல்லாவற்றிலும் நகைகள் கிடைக் கின்றன. ஆனாலும், உடைகளுக்கு மேட்ச்சாக அதே கலர்களில், அதே டிசைன்களில் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. பட்டு நூல் எனப்படுகிற சில்க் த்ரெட் நகைகளில்  இது சாத்தியம்.

பிங்க் புடவை, நீல பார்டர், நடுநடுவே கோல்டன் புட்டாக்கள் என்றால், அதே காம்பினேஷனில் செய்து வாங்கலாம். அதே பிங்க்கில் சல்வார், மல்ட்டி கலர் துப்பட்டா என்றால், அந்த காம்பினேஷனில் இன்னொரு செட் சில்க் த்ரெட் ஜுவல்லரி செய்து போட்டு அழகு பார்க்கலாம்.

கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கிறது; எடை குறைவு என்பதால் உடலை உறுத்தாது; பளீரென்ற தோற்றம்... இப்படி பட்டு நூல் நகைகளின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பட்டு நூல்களில் ஜிமிக்கி, வளையல்களை மட்டுமே பார்த்தவர்களுக்கு நெக்லஸ், நெத்திச்சுட்டி, கொண்டை வளையம், சேலை பின் என ஏகப்பட்ட வெரைட்டி செய்து அசத்துகிறார் கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த பத்மா பார்த்தசாரதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!