பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

அந்த நாள் வி.எஸ்.சரவணன், படம் : ரமேஷ் கந்தசாமி

காதல்... அனைத்தையும் உதறிவிட்டு அன்பு செய்தவரைத் தேடி வரச்செய்யும்; வாழச் செய்யும். சாதிப் பித்து... பெற்ற மகளையே கொல்லத் துணியச் செய்யும்; வாழ்வறுக்கச் செய்யும். காதலருடன் வாழச் சென்று, பெற்றோரால் வாழ்க்கை இணையை இழந்து நிற்கிற கௌசல்யா சங்கரின் சோகம் நாம் அறிந்ததே. மார்ச் 13-ம் தேதியுடன் இரண்டாண்டுகளைக் கடந்திருக்கும் அந்த நினைவுகளின் வடு இன்னும் ரணமாகவே இருக்கிறது கௌசல்யாவுக்கு.

“எங்க கல்யாணம் முடிஞ்சு சரியா எட்டு மாதமாச்சு. ஒவ்வொரு மாசம் முடியும்போது பெரிய சாக்லேட் வாங்கித் தர்றது சங்கரின் வழக்கம். அன்னிக்கு நைட்டும் அப்படித்தான் தந்தான். அடுத்த நாள் காலையில எழுந்ததும், ஹேர்கட் செய்துட்டு வந்தான். ரெண்டு பேரும் சேர்ந்து, துணி துவைச்சோம். அப்புறம், ‘உனக்குச் சில்லி பரோட்டான்னா பிடிக்கும்ல... உடுமலையில் ஒரு ஹோட்டல்ல மதியத்துல சூப்பரான சில்லி பரோட்டா கிடைக்கும். ஜவுளிக்கடைக்குப் போயிட்டு, அப்படியே சாப்பிட்டு வந்துடுவோம்’னு சொன்னான். ரெண்டு பேரும் சந்தோஷமா கிளம்பி பஸ்ல போனோம்.

ஜவுளிக்கடையில் சட்டை எடுத்துட்டு வெளியே வந்தோம். ஏற்கெனவே இப்படி ஒருமுறை வெளியே வந்திருந்தப்போ, என்னைக் கடத்திட்டு போறதுக்கு எங்க வீட்டுக்காரங்க முயற்சி செய்ததைப் பத்தி பேசிட்டே ரோட்டை கிராஸ் பண்ணினப்போ...” - கெளசல்யாவின் குரல் உடைகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick