ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மே 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். முன்கோபம் விலகும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும்.

பிரச்னைகள் தீர்வதுடன் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.


ரிஷபம்: பழைய சொந்த பந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும்போது கவனம் தேவை.

வியாபாரத்தில் வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்களின் நிறைகுறைகளைக் கனிவுடன் சுட்டிக்காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை
வந்து நீங்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் தருணமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!