லாபத்தைப் பெருக்கும் சரிவிகித முதலீடு!

சேமிப்பு

ம்மவர்கள் சம்பளப் பணத்தை மிச்சப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கிறார்கள். அதை முறையாக முதலீடு செய்து பெருக்குவதிலோ, அவ்வளவாக ஆர்வம்காட்டுவதில்லை. காரணம், ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார் என்றால், மொத்தப் பணத்தையும் அதிலேயே போட்டுவருகிறார். இன்னொருவர் தங்கம் வாங்கி வருகிறார் என்றால், மொத்தச் சேமிப்பையும் அதிலேயே போடுகிறார். இதுபோலத்தான் ரியல் எஸ்டேட்டும் இருக்கிறது. இப்படிச் செய்வதால், அந்தக் குறிப்பிட்ட முதலீட்டின்  விலை அல்லது மதிப்பு இறங்கிவிட்டால், அதிக இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் தானே? அதற்குப் பதில், முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். இதையே அவர்கள் `சரிவிகித முதலீடு' என்கிறார்கள்.

உடலுக்குத் தேவையான அனைத்து உணவுப்பொருள்களையும் உரிய அளவுகளில் கொண்ட உணவே சரிவிகித உணவு.  பொதுவாக, மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரி தேவையில் 10-15 சதவிகிதம் புரதங்களிலிருந்தும்

25-30 சதவிகிதம் கொழுப்பிலிருந்தும் மீதி கார்போஹைட்ரேட்டிலிருந்தும் பெறப்படுகிறது. இப்படி இருந்தால்தான் ஒரு மனிதனை நோய்கள் தாக்காது. அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். இதேபோல ஒருவரின் முதலீடும் சரிவிகிதமாக இருந்தால்தான், அவருக்கு அதிக லாபம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick