என்னால் முடியும்... உங்களாலும் முடியும்!

தனியே... தன்னந்தனியே..

120 நாள்கள்... 10 நாடுகள்... பெங்களூரு முதல் சிட்னி வரை 28,000+ கிலோமீட்டர் தொலைவு... அதுவும் பைக் பயணமாக... கேண்டிடா லூயிஸ் முன்னெடுத்திருக்கும் சமீபத்திய தனிப்பெரும் சாதனை இது!

பெங்களூரைச் சேர்ந்த கேண்டிடா, பைக் காதலி; பயணங்களின் ப்ரியை. வெறித்தனமான இந்தக் காதலின் பின்னணியில் காரணம் இல்லாமலில்லை.

``சுற்றிலும் நீர்வீழ்ச்சிகள், கூப்பிடும் தூரத்தில் கோவானு நான் வளர்ந்த சூழல்தான் பைக் ஓட்டும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்துச்சு. அப்பாவோடும் என் ஃப்ரெண்ட்ஸோடும் நிறைய பைக் ரைடு போயிருக்கேன். கடந்த பத்து வருஷத்துல 14 நாடுகளை பைக்கில் கடந்திருக்கேன்'' - அநாயாசமான சாதனையைச் செய்துகொண்டே, அமைதியாக, அடக்கமாகப் பேசுகிறார்.

``வழக்கமா வெளிநாடுகளுக்குப் போகும்போது ஃப்ளைட்ல போய் இறங்கி, அங்கே பைக்கை வாடகைக்கு எடுத்துக்கிட்டு சுற்றுவேன். இந்த முறை பெங்களூர் டு லண்டன் போகிறதா ப்ளான். `சேஞ்ச் யுவர் வேர்ல்டு' ஃபண்ட் டிராவல் புராஜெக்ட்ல என்னை செலெக்ட் பண்ணியிருந்தாங்க. பைக்கர் அலிஸ்டர் ஃபார்லண்டு நினைவாக நடந்த புராஜெக்ட் அது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அலாஸ்காவிலிருந்து சௌத் அமெரிக்காவுக்கு பைக்ல போயிட்டிருந்தபோது அலிஸ்டர் இறந்துட்டார். அதுக்காகத்தான் அவர் சார்பா நான் இந்த ட்ரிப்புக்கு சம்மதிச்சேன்'' - நீண்ட பயணத்தின் நோக்கம் சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick