14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

தென்கொரிய அரசியான இந்திய இளவரசி!

தென்கொரிய அதிபரின் மனைவியான கிம்-ஜங்-சூக் சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக அயோத்தி நகருக்கு வந்தார். `இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தி, சூரி ரத்னா எனப்படும் கொரிய அரசி பிறந்த மண்ணும்கூட' என்று திடமாக நம்புகின்றனர் கொரிய மக்கள். ஹியோ-ஹுவாங்-ஓக் எனப்படும் அயோத்தி நாட்டைச் சேர்ந்த இளவரசி, கி.பி.48-ம் ஆண்டு கொரியா சென்று அங்கு கிம் சுரோ என்ற மன்னனைக் கரம்பிடித்து அரசியாகி, `கரக்' எனப்படும் அரசகுல வம்சத்தைத் தோற்றுவித்ததாக நம்புகின்றனர் கொரிய மக்கள். கொரிய மன்னன் கிம் சுரோவுக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி தன் கனவில் கடவுள் தோன்றி சொன்னதால், கொரிய நாட்டுக்குக் கப்பலில் 16 வயதேயான தன் மகளை அயோத்தியின் மன்னன் அனுப்பிவைத்ததாகச் சொல்கின்றன சீனக் கதைகள். `சம்யுக் யூதா' எனப்படும் காப்பியம், அரசி ஹுவாங்-ஓக் `அயுத்தி' நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது. இந்தத் தம்பதிக்கு 10 மகன்கள் பிறந்ததாகவும், 150 ஆண்டுகள் தம்பதி ஆட்சி புரிந்ததாகவும் சொல்கிறது சம்யுக் யூதா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick