ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நவம்பர் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை

மேஷம் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. கணவருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்துவது அவசியம்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.


ரிஷபம் நேர்மறை எண்ணங்கள் மனதில் பிறக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மின்னணு சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் நீண்ட நாள்களாக வராமல் இருந்த பாக்கித் தொகை வசூலாகும்.

உத்தியோகத்தில்
பதவி உயர்வைப் பெறுவீர்கள்.

தீராத பிரச்னைகள் தீரும் நேரமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick