#நானும்தான் - 2 | MeToo campaign - mini series - Aval Vikatan | அவள் விகடன்

#நானும்தான் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குறுந்தொடர்

னிதா பஸ்ஸைவிட்டு இறங்கி, சாலையைக் கடப்பதற்கு முன் தலையைத் திருப்பி இரண்டு பக்கமும் பார்த்தாள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால் இந்த ஜாக்கிரதைக்கு ஓர் அர்த்தமும் இல்லை. ஆனாலும், அப்படிப் பார்த்ததால் அவளுக்கு விதியின்மீது நம்பிக்கையில்லை என்று சொல்ல முடியாது. விதியை நொந்துகொண்டுதான் பார்த்தாள்.

சாலையைக் கடந்ததும் எதிர்ப்புறம் இருந்தது ஒரு சிறிய சந்து. அவள் வேலை செய்யும் கார்மென்ட் அங்கிருந்து சில நூறடி தூரத்தில் அந்தச் சந்துக்குள்தான் இருந்தது.

இன்று ரமேஷிடம் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என ராத்திரி முதலே முடிவெடுத்திருந் தாள். ஆனாலும், விடியலில் வெளிச்சத்தைப் பார்த்தபின் அந்தத் திட்டம் உள்ளே போய் ஒளிந்துகொள்வது அவளுக்கே தெரிந்தது. வெளிச்சம்கண்டு அஞ்சுவதா உறுதி? வைராக்கியத்தையும் மனோதிடத்தையும் அடிக்கடி சேர்த்துவைத்து இறுக்கி கயிறாக்கி நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியிருந்தது.

சந்துக்குள் நடந்தபோது அவருடைய உடன் பணித் தோழிகள் சிலரும் சேர்ந்துகொண்டனர்.

ரமா கேட்டாள்... ‘‘வனிதா இன்னிக்கு அவன்கிட்ட தெளிவா பேசுடுடீ’’ என்று கிசுகிசுத்தாள்.

‘‘உம்’’ என்ற வனிதாவின் குரல், அவள் காதுக்கே கேட்கவில்லை.

‘‘சொல்றது புரியுதா?’’ என்றாள் ரமா.

வனிதா, இந்த முறை தலையசைத்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick