அவள் இரும்பு மனுஷி! | Aishwarya Rajesh brother talk about her lovely brotherhood - Aval Vikatan | அவள் விகடன்

அவள் இரும்பு மனுஷி!

தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் - அண்ணன் மணிகண்டன்சிஸ்டர்

‘சாமி 2’, `வடசென்னை', `செக்கச் சிவந்த வானம்', `துருவ நட்சத்திரம்', `கனா' என ஐஸ்வர்யா ராஜேஷின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அவரோ இன்னமும் மீன்கடையில் பேரம் பேசி மீன் வாங்குவதும், டூவீலரில் சென்னையைச் சுற்றுவதுமாக அரிதார முகம் தவிர்த்து அகம் கவர்கிறார்.

`அதுதான் அவரது அழகு... அதுவே அவரது இயல்பும்' என்கிறார் மணிகண்டன். சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `அழகு' தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் மணிகண்டன், ஐஸ்வர்யாவின் உடன்பிறப்பு. தங்கச்சியைப் பற்றிப் பேச சொன்னால், எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் தயாராகிறார் பாசக்கார அண்ணன்.

``அம்முலு... ஐஸ்வர்யாவை நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அவளுக்கு நான் புஜ்ஜி. ஐஸ்வர்யாவுக்கு என்னையும் சேர்த்து மூணு அண்ணன்கள். நான் மூணாவது. ரெண்டு அண்ணன்களும் தவறிட்டாங்க. இப்போ நானும் தங்கச்சியும் மட்டும்தான். அம்மா, தங்கச்சி, நான், என் மனைவி, குழந்தைனு எல்லோரும் சந்தோஷமான கூட்டுக் குடும்பம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick