அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட் | Letters for Aval Vikatan Readers Experience - Aval Vikatan | அவள் விகடன்

அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்

ர்ப்பிணிகளுக்கு உடல் உழைப்பு அவசியம் தேவை என்பதையும், உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளைத் தவறாமல் பெறுவது முக்கியம் என்பதையும் `நமக்குள்ளே’ பகுதியில் ஆசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது ஆக்கபூர்வமானது; அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது.

- கே.எல்.புனிதவதி, கோவை-17;
- கவிதா சரவணன், திருச்சி-6;
- வி.கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி;
- அ.முரளிதரன், மதுரை-3;
- என்.கோமதி, நெல்லை-7


ண்ணதாசனின் மகளும், சமையல்கலை நிபுணருமான ரேவதி சண்முகத்தின் `உறவுகள் உணர்வுகள்’ பகிர்வைப் படித்து மனம் நெகிழ்ந்தேன்.

- ரேவதி சம்பத்குமார், ஈரோடு;
- மயிலை கோபி, சென்னை-83


‘தன்னிகரில்லா தனித்துவம் கொண்டவன் பூண்டு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை படித்தேன். உடலில் பதுங்கியிருக்கும் நோய்களுக்கு அருமருந்தாக அமைந்த பூண்டின் மகிமை அற்புதம்.

- எஃப்.முர்திசா, காயல்பட்டினம்;
- வி. மோனிஷா பிரியங்கா, திருச்சி-18;
- மகாலட்சுமி சிவக்குமார், ஸ்ரீரங்கம்;
- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்;
- சி.கார்த்திகேயன், சாத்தூர்


ளம்பிறையின் ‘துணை’ கவிதை படித்தேன். சின்னச்சின்ன வார்த்தைகளின் மூலம் மனதை மயிலிறகால் வருடிவிட்ட உணர்வு!

- எஸ்.வி.எஸ்.மணியன், கோவை-12;
- பா.குணா, வயலூர்


* ‘மாயா பஜார்’ படத்தில் வரும் ‘கல்யாண சமையல் சாதம்’ பாடல் வரிகளை நினைவுபடுத்தியது, `கல்யாண விருந்து' 32 பக்க இணைப்பு!

- செல்வி வி.தீட்சணா, சென்னை-41;
- என். காளிதாஸ், சிதம்பரம்;
- ஜி.ராஜேஸ்வரி, சென்னை-88

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick