பிரசவத்துக்குப் பிறகு கடுமையான முதுகுவலி - மயக்கவியல் நிபுணர் வெங்கடேஷ்

எதனாலோ?

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு சிசேரியன் நடந்தது. அப்போது, முதுகில் மயக்க ஊசி போட்டார்கள். அதன் பிறகு கடுமையான முதுகுவலி வந்துவிட்டது. முதுகில் ஊசி போட்டதால்தான் இந்த வலி என்கிறார்கள் சிலர். அது உண்மையா?

முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஜவ்வுப் பகுதிகளிலோ, தசைகள் மற்றும் எலும்புகளிலோ ஏற்படும் பாதிப்புகள் காரணமாக முதுகுவலி வரலாம். ஆனால், பலர் இப்படித்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது இரண்டுவிதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.

இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு, வால்வு பிரச்னை உள்ளவர்களுக்கு 'எபிடியூரல்' என்கிற மயக்க மருந்து கொடுப்போம். இது முதுகுத் தண்டு வடத்துக்கு வெளியே போடப்படுவது.  இந்த மருந்தை, `கதீட்டர்' என்னும்  டியூபின் உதவியோடு அறுவை சிகிச்சை முடியும் வரை சிறுகச்சிறுக செலுத்துவோம். இந்த மருந்தால் ரத்த அழுத்தம் அதிரடியாக இறங்காது.  பக்க விளைவுகளும் ரிஸ்க்கும் குறைவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick