கையளவு மனசு... கடலளவு சயின்ஸு!

இதயம் காக்கும் இயந்திரங்கள்

நீண்ட தூர ஓட்டம், இருளில் ஒரு நொடி தோன்றி மறையும் விசித்திர உருவம், பின்னால் நின்றுகொண்டு எதிர்பாரா நொடியில் சத்தமிட்டு நம்மைத் திடுக்கிடச் செய்யும் நண்பர்களின் கலாய், நள்ளிரவில் பிறந்தநாள் கேக்குடன் எழுப்பும் நண்பர்கள், காதலைச் சொல்லி பறந்துவரும் அந்தக் குறுஞ்செய்தி... நம் இதயத்துடிப்பை எகிறவைக்கும் இதுபோன்ற தருணங்களை முடியாத சரக்கு ரயிலின் பெட்டிகள்போல அடுக்கிக்கொண்டே போகலாம். உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செங்குருதியைப் பாய்ச்சி, ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் துடிப்புடன் இருந்து நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது, கைப்பிடி அளவே உள்ள அந்தத் தசை!

உடலின் மிக முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் இதைப் பேணிப் பாதுகாக்க, பல்வேறு வழிமுறைகளை மருத்துவ அறிவியல் அதன் முக்கியப் பக்கங்களில்  பூர்த்திசெய்து நம்மிடம் நீட்டுகிறது. ஆரோக்கியத்தின் இடர்க்காலங்களில் இதயத்தில் என்ன பிரச்னை என்பதை எப்படி அறிந்துகொள்வது? இதயப் பிரச்னைகளைச் சரிசெய்ய இப்போது புதிதாக வந்திருக்கும், வரவிருக்கும் முக்கியத் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick