பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

நீங்களும் செய்யலாம்

கதகவென மின்னும் உங்கள் வைர மூக்குத்தியும் தோடும் கரியிலிருந்துதான் வந்தவை என்றால் நம்ப முடிகிறதா? அதே போலத்தான் நம் வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களும். முகம் பார்க்கும் அளவுக்குப் பளபளவெனப் பார்த்து நீங்கள் வாங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் அதற்கு முன் பொலிவு இல்லாத அலுமினியப் பாத்திரங்கள் போன்றே இருக்கும் என்பதையும் நம்புவீர்களா? அலுமினியம் மாதிரி காட்சியளிக்கும் அவற்றை பாலிஷ் செய்த பிறகே பளபளப்பு பெற்று முழுமையான உருவம் பெறுகின்றன.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடப் பயன்படுத்துகிற மாப் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார் சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சௌந்தர்யா.

‘`பத்தாவது வரை படிச்சிருக்கேன். எங்க ஏரியாவில் இப்படி பாத்திரங்களுக்கு பாலிஷ் போடப் பயன்படுத்தற மாப் தயாரிக்கிறவங்க இருந்தாங்க. பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும் பகுதிநேர வேலையா பாலிஷ் மாப் செய்யக் கத்துக்கிட்டு செய்திட்டிருந்தேன். ஒருகட்டத்துல அதையே முழுநேர பிசினஸா செய்யற அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன். படிப்பு, அனுபவம்னு எதுவும் தேவையில்லாம, கணிசமான வருமானம் பார்க்கிற இந்த பிசினஸ், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்குச் சரியான சாய்ஸ்’’ என்கிற சௌந்தர்யா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick