இது டீன் ஏஜ் டயட் - உங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்?

ஹெல்த்தி வெல்த்தி கிச்சன்

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து  ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும். இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்' எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும்  உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும்.

“டீன் ஏஜ் பருவத்தினர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகள் இருக்கின்றன. `சரியான உணவைச் சாப்பிடுகிறோமா, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா?’ என்பதே அந்தக் கேள்விகள். `டீன் ஏஜ்’ பருவம் என்பது உணர்ச்சிகளால் நிறைந்தது. அதனால், அவர்கள் எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். அதே உணர்வுடன் உணவில் கட்டுப்பாடின்றி இருப்பது தவறு” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

“பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் தொடங்கும்போதே பருவம் எய்திவிடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு உணவின் மீதான கவனிப்பு அதிகம் தேவைப்படுகிறது. `டீன் ஏஜ்’ பெண்களுக்கு என்னென்ன உணவுகள் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick