கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்! | Gadgets Might Be Harming Your Children Health - Aval Vikatan | அவள் விகடன்

கேட்ஜெட்ஸ்... - குழந்தைகளின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்!

தேவை அதிக கவனம்

ரோக்கியம், இயற்கை வாழ்வியல் முறை, குழந்தை வளர்ப்பு எனப் பல மருத்துவ விழிப்பு உணர்வு வீடியோக்களைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருபவர், காரைக்குடியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின். அவரின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் பகிரப்படுகின்றன. ‘ஆஷா லெனின்’ என்ற அவருடைய முகநூல் பக்கத்துக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஆஷாவின் வெகு இயல்பான, தெளிவான பேச்சு, ‘தனக்குத் தெரிந்த விழிப்பு உணர்வு தகவல் மக்களுக்குச் சென்றடைய வேண்டும்’ என்ற அக்கறை... இவைதான் அந்த வீடியோக்களின் வெற்றிக்கு அடிப்படை. ஆஷாவிடம் பேசினோம்... 

உங்களைப் பற்றி..?

என் பூர்வீகம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பிறந்ததிலிருந்து இப்போதுவரை முழுக்கவே இயற்கை வாழ்வியல்தான். டீ, காபி குடிச்சதில்லை. பாட்டில் டிரிங்ஸ், பாக்கெட் உணவுகள்னு எதுவும் சாப்பிட்டதில்லை. சில நேரங்களில் நுங்கும் கரும்புமே ஒருவேளை சாப்பாடாக ஆனதுண்டு. பெரும்பாலும் நடந்தோ, சைக்கிளிலோதான் பயணங்கள். நம்பமாட்டீங்க... மகப்பேறு தவிர்த்து இப்போவரை ஆஸ்பத்திரிக்கே போனதில்லை. சில காரணங்களாலே எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு தடை படவே, ஹோமியோபதியில் சேர்ந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick