தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின் | Hum - Our Stories Our Roots Our Heritage Says What? - Aval Vikatan | அவள் விகடன்

தலைமுறைகளின் அருமை பெருமைகளைப் பதிவு செய்யுங்கள்! - மஞ்சு ஜெயின்

உறவுகள்... உணர்வுகள்...

வாட்ஸ்அப் அறிமுகமாகியிருந்த நேரம் அது. வீட்டுக்குள்ளேயே தானும் தன் குடும்பத்தாரும் வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக் கொள்வோம் என்பதை, பெருமையாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பிரபல நடிகை ஒருவர்.

`வீட்டுக்குள்ளேயே இருப்பாங்களாம்... வாட்ஸ்அப்ல பேசிப்பாங்களாம்.  ஒருத்தரோடு ஒருத்தர் முகம்பார்த்துப் பேசிக்கவேண்டியதுதானே... பெரிய இடம்னா இப்படித்தான்போல...' என்று பழித்தவர்களில் நாமும் இருந்திருப்போம்.

இன்று, `வாட்ஸ்அப் இல்லாமல் வாழ்க்கையே இல்லை; இன்ஸ்டாகிராம் இல்லாமல் இல்லறம் இல்லை' என்கிற நிலை. எழுத்துகளைச் சுருக்கி, மொழிக் கொலை செய்து, வார்த்தைகளை டைப் செய்த காலம் மாறி, இது வாய்ஸ் மெசேஜ் காலம். வாய்ஸ் மெசேஜில் பேசுவதை நேருக்குநேர் பேசினால்கூட உறவுகள் மேம்படும். ஆனால், யாருக்கும் பொறுமையில்லை.

இயந்திரத்தனமான வார நாள்களில்தான் இப்படி என்றால், விடுமுறை நாள்கள் இன்னும் மோசம். முகம் தெரியாத நபர்களுடன் வீக் எண்டு பார்ட்டி, ஹைவேஸில் பைக் ரைடு, இரவுக்காட்சி, விடியும் வரையிலும் விரல்களுக்கு வலிக்கும் வரையிலும் மொபைல் விளையாட்டு... இப்படித்தான் நகர்கின்றன நாள்களும் பொழுதுகளும். என்றோ ஒருநாள் ஞானம் பிறந்து நின்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், இழந்தது காலத்தை மட்டுமல்ல... உறவுகளையும்தான் என்பது விளங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick