கூந்தல் மேஜிக்! - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

இது புதுசு!

30 ப்ளஸ் வயதில் இருக்கும் எனக்குத் தலையின் முன் பகுதியில் முடி மெலிந்து மண்டைப்பகுதி வெளியே தெரிகிறது. பெரிய பதவியில் இருக்கும் எனக்கு மீட்டிங், கான்ஃபரன்ஸ் போன்றவற்றில் பங்கேற்கும்போது இது தர்மசங்கடத்தைத் தருகிறது. ஹேர் பேட்ச் உபயோகிப்பதில் உடன்பாடில்லை. வேறு தீர்வுகள் உண்டா?

- வேலூரிலிருந்து ஒரு வாசகி.


ந்தக் காலத்தில் இளம் வயதிலேயே எல்லோருக்கும் முடி உதிர்வு அதிக மிருக்கிறது. அதன் விளைவாகக் கூந்தல் மெலிந்து, மண்டைப்பகுதி வெளியே தெரிகிறது. அந்த இடைவெளியை மறைக்க இதுவரை எந்த வழியுமே இல்லாமலிருந்தது. அந்தக் குறையைப் போக்க வந்திருப்பவைதான் `ஹேர் ஃபைர்ஸ்'. இது நுண்ணிய துகள் வடிவில் இருக்கும். இடைவெளி தெரிகிற மண்டைப்பகுதியில் இதைத் தூவிக்கொண்டால் போதும். அது இடைவெளியை மறைத்து, அந்த இடத்தில் முடி இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். சமீப காலமாக இது ரொம்பவே பிரபலமாகி வருகிறது.

இவை கெரட்டின் என்கிற புரதம் கொண்டு தயாரிக்கப்படுபவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!