உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

தனியே... தன்னந்தனியே...

வேலையும் வாழ்க்கையும் கொடுக்கும் மன அழுத்தத்திலிருந்து மீள, பலருக்கும் பயணமே சிறந்த வழி. ஆனால், பயணமே ஒருவருக்கு வேலையும் வாழ்க்கையுமானால்?

`பிக் 4’ ஆடிட் நிறுவனத்தில் எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டன்ட்டாக இருக்கும் கஸ்தூரி ராமநாதன், அப்படியோர் அதிர்ஷ்டசாலிதான். உலகம் சுற்றும் வாலிபி! இதுவரை 21 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். பயணத்தின் இடையேதான் நம்மிடமும் பேசினார். இந்த வருட இறுதியில் எண்ணிக்கை 25-ஐ எட்டுமாம்!

``அக்டோபர் மாசம் ஆம்ஸ்டர்டாம்ல ஆடிட்டிங் இருக்கு. அங்கிருந்து ஜெர்மனி போயிட்டு, அப்புறம் இந்தியா வர்றேன். அடுத்த வருஷ ஆரம்பத்துல என் தங்கையோடு மியான்மர் போகத் திட்டமிட்டிருக்கேன். இத்தாலியும் வெயிட்டிங்’’ - ஷெட்யூல் சொல்கிறார் சோலோ ட்ரிப் பிரியை.

``ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தபோது ஸ்கூல் சார்பா ஒரு கான்ஃப்ரென்ஸுக்காக நியூயார்க்கும் வாஷிங்டனும் போனதுதான் என் முதல் சோலோ ட்ரிப். ஏர்போர்ட்ல விடறதுக்கு அம்மா அப்பா வந்தாங்க. வாஷிங்டன்ல இறங்கினதும் என்னைக் கூட்டிட்டுப்போறதுக்கு உறவினர் வந்திருந்தாங்க. இதுக்கிடையில நான் ஃபிராங்க்ஃபர்ட்டுல ஃப்ளைட் மாறினது, யு.எஸ் வரையிலான டிராவல்னு எல்லாமே தனியாதான் பண்ணினேன். அந்த முதல் பயணம் நிஜமாகவே பயமாகவும் த்ரில்லிங்காகவும்தான் இருந்தது. ஆனா, அதுதான் இன்னிக்கு என் அடையாளத்துக்கான ஆரம்பப்புள்ளி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!