மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா | Shadow of Mahatma - Kasturba - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

எதிர்க்குரல்

ஸ்தூர்பாவுக்கு முன்பே ஒரு பெண்ணை அடையாளம் கண்டு, காந்தியோடு நிச்சயதார்த்தமும் செய்து முடித்துவிட்டார்கள். ஆனால், மணநாளுக்கு முன்பே அந்தப் பெண் இறந்துவிட்டார். இரண்டாவதாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணும் இறந்துவிட்டார். மூன்றாவதுதான் கஸ்தூர்பா. அப்போது கஸ்தூர்பாவின் வயது 14. காந்திக்கு அவரைவிட ஒரு வயது குறைவு. திருமணம் நடந்த ஆண்டு 1881 அல்லது 1882 அல்லது 1883 ஆக இருக்கலாம் என்கிறார்கள். திருமண ஆண்டு மட்டுமல்ல, திருமணம் நடந்ததேகூட காந்திக்கு முழுமையாக நினைவில் இல்லை. கனவுபோல பதிந்திருந்த சில காட்சிகளை மட்டும் `சத்தியசோதனை'யில் அவர் நினைகூர்ந்தார்... `நல்ல ஆடைகள் அணிந்துகொண்டேன். மேள ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது நினைவில் இருக்கிறது. பிறகு, விளையாடுவதற்கு வித்தியாசமான ஒரு பெண் கிடைத்தாள்!’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close