குருப்பெயர்ச்சி பலன்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
4.10.2018 முதல் 28.10.2019 வரை

மேஷம் உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியைத் தந்த குரு பகவான் இப்போது 4.10.2018 முதல் 28.10.2019 வரை 8-ம் வீட்டில் இருக்கிறார்.  8-ம் வீட்டுக்கு குரு வந்தால், ‘எல்லாம் தட்டிப்போகும், தள்ளிப்போகும்’ என்பார்களே என்று கவலைப்பட வேண்டாம். அவர் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால், உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன அயல்நாட்டுப் பயணம் அமையும். செலவுகள் ஒருபக்கம் இருந்துகொண்டேயிருக்கும். தவிர்க்க முடியாத பயணங்களும் அதிகரிக்கும். ஆனாலும், அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும். கணவருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவருக்கு உத்தியோகத்தில் இடமாற்றமும், வேலைச்சுமையும் இருக்கும். உறவினர்கள் வகையில் அலைச்சல், செலவுகள் வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடி புகுவீர்கள். புண்ணிய தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில்
விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி விற்பனை மூலமாகவும் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.

வேலைச்சுமை இருந்தாலும், இந்த குரு மாற்றம் வெற்றியையும் உற்சாகத்தையும் தரும்.


ரிஷபம் கடந்த ஓராண்டாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பலவிதங்களிலும் சங்கடப்படுத்திய குரு பகவான் இப்போது 4.10.2018 முதல் 28.10.2019 வரை 7-ம் வீட்டில் அமர்கிறார். இங்கிருந்து உங்களின் ராசியைப் பார்ப்பதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். இதுநாள் வரை ஏற்பட்ட நஷ்டங்கள், அவமானங்கள், பிரச்னைகள் யாவும் உங்களை விட்டு விலக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வருமானம் பெருகும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாமனார், மாமியார் அன்பாக இருப்பார்கள். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவர் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரம் அதிகம் நடத்தும் இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.

இனி தொட்டதெல்லாம் வெற்றிபெறும் விதமாக இந்த குரு மாற்றம் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!