சுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சட்டம் பெண் கையில்!

வ்வோர் ஆண்டும் நவம்பர் 19 அன்று உலகக் கழிப்பறை தினத்தை அனுசரிக் கிறோம். ஆனால், சுகாதாரமான கழிப்பறை பெண்களுக்கு இங்கு சாத்தியமாகியிருக்கிறதா? காலம் காலமாகப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற கழிப்பிடங்களே பெரும்பகுதி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இயற்கை உபாதைகளைக் கழிக்க, கிராமப்புறப் பெண்கள் ஊரின் ஒதுக்குப்புறங்களில் அத்தனை சங்கடங்களுக்கு இடையில் அச்சத்துடனேயே சென்றுவருகிறார்கள். நகரம், பெருநகரங்களில் பயணங்களில் பெண்கள் சுகாதாரமற்ற கழிப்பிடங்களால் அவதியுறுகிறார்கள்.

சுத்தமான கழிப்பறை பெண்ணின் உரிமை. இந்திய அரசியலமைப்பு சாசனம் 1949 - ஷரத்து 21, மனிதனின் உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதைப் பற்றி விளக்குவதுடன், சுகாதாரம் நமது உரிமை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்த உரிமையை சக மனிதனுக்குப் பெற்றுத்தர சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து பலதரப்பினரும் போராடிவருகின்றனர். அதில் சில முக்கிய சட்டக் குறிப்புகள் குறித்துப் பகிர்ந்துகொள் கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!