என்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்!

சட்டம் பெண் கையில்!வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ல பெற்றோர்களுக்கும் மணப்பெண்களுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் கூடுதல் விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்ஆர்ஐ திருமணங்களில் ஏதேனும் பிரச்னை என்றால், அதற்கான சட்ட உதவி பற்றிய விழிப்பு உணர்வு குறைவாகவே இருக்கிறது. என்ஆர்ஐ திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

என்ஆர்ஐ திருமணம்... இவையெல்லாம் அவசியம்!

அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர் களில் என்ஆர்ஐ (Non Resident Indian) என்றும் பிஐஓ (Person of Indian Origin) என்றும் இரண்டு பிரிவினர் உள்ளனர். இவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் திருமண வாழ்க்கை பிரச்னைக்கு உள்ளாகும்போது, இந்தியாவில் 1969-ல் இருந்து அமலில் இருக்கும் வெளிநாட்டுத் திருமணச் சட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

 இச்சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ளும் இருவரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும். ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் முடிந்திருக்க வேண்டும். பொருந்தாத உறவுத் திருமணங்கள் செல்லாது. அதாவது இந்துக்கள் உறவுமுறையில் திருமணம் செய்துகொண்டால் மாமன் முறை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

திருமணத்துக்கு முன் குறைந்தது 30 நாள்களாவது மணமக்களில் ஒருவரேனும் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

திருமணத்துக்குத் தடை விதிக்க யாரேனும் விரும்பினால் திருமண அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் கோரிக்கையை எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பதிவு அலுவலர் திருமண நோட்டீஸ் புத்தகத்தில் எழுதிவைப்பார்.

திருமணப் பதிவுக்காகப் பொய்யான ஆவணங்களையோ, தகவல்களையோ அறிவித்தது நிரூபிக்கப்பட்டால் குறைந்தது மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். 

இருதார மணம் புரிந்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 494 மற்றும் 495-ன் படி விதிக்கும் தண்டனை  என்ஆர்ஐ திருமணத்துக்கும் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick