முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்! | Three women got nobel prize for 2018 - Aval Vikatan | அவள் விகடன்

முக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்!

வாவ் பெண்கள்

2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், சமீபத்தில் நார்வே மற்றும் ஸ்வீடன் நோபல் கமிட்டிகளால் அறிவிக்கப் பட்டன. அமைதிக்கான நோபல் பரிசை, நடியா முராத் மற்றும் டென்னிஸ் முக்வேகய் ஆகியோருக்கு அளிப்பதாக நார்வே நாட்டுக் குழு அறிவித்தது.

போர் மற்றும் கடின காலங்களில் வன்புணர்வை ஆயுதமாகப் பயன் படுத்துவதைத் தடுக்கும் பணிக்குத்தான் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு. பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான செயற்பாட்டாளரான நடியாவின் கதை, கல்மனதையும் கரைக்கக்கூடியது.

2014-ம் ஆண்டு வட இராக்கின் சிஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோஜோ எனும் சிறு கிராமத்தில் 19 வயது மாணவியாக நடியா வாழ்ந்துவந்தார். 2014 ஆகஸ்ட் 15, இவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ``என் உலகம் மிகவும் சிறியது. வரலாறு படிக்க ஆசைப்பட்டேன். முதலில் ஐ.எஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன். அன்று மதியம் எங்கள் ஊரில் உள்ள அனைவரையும் பள்ளியில் கூடச்சொன்னார்கள் ஐ.எஸ் அமைப்பினர். பெண்கள் தனியாக, ஆண்கள் தனியாகப் பிரித்து அழைத்துச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் 320 ஆண்களைச் சுட்டுக்கொன்றனர். என் தாய் மற்றும் ஆறு சகோதரர்கள் அன்று கொல்லப்பட்டார்கள்’’ என்று பின்னால் ஐ.நா சபையில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார் நடியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick