கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுந்தரி ஜகதீசன்

ம் முன்னோர் சுருக்கமாக `பணத்தை மண்ணில் போடு; இல்லை, பொன்னில் போடு' என்று கூறிவிட்டார்கள். வீடு என்பது இருப்பிடம்; பாதுகாப்பு; முதலீடு... இவை எல்லாவற்றையும் தாண்டி அன்றாட தேவையும்கூட.

ஆனால், இன்று இந்தியாவில் விலை போகாமல் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல லட்சங்களில் உள்ளன. இதற்குப் பல காரணங்கள். ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட் விலை ரூ.60 லட்சம். அதில் வரக்கூடிய வாடகை ரூ.15,000. ஆனால், வீட்டுக் கடனுக்குக் கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகை ரூ.42,000. அதுவும் 20 வருடங்களுக்கு. அடுத்த 20 வருடங்கள் நாம் இதே ஊரில் இருப்போமா, நம் வேலை நிலைக்குமா, நிலைத்தாலும் ரூ.42,000 மாதத் தவணை கட்ட நம்மால் முடியுமா? இப்படியெல்லாம் நம் சிந்தனை செல்வது நியாயம்தானே?

மேலும், சில பில்டர்கள் ஐந்தாறு வருடங்கள் இழுத்தடிப்பதும், முறையான அனுமதியோ, பத்திரங்களோ இன்றி செயல்படுவதும் நம்மைப் பயமுறுத்துகிறது. சரி, வீடு வேண்டாம்; நிலம் வாங்கிப் போடலாம் என்றால், நிலத்தின் விலை கைக்கெட்டாமல் பறக்கிறது; நில அபகரிப்பு வேறு அச்சுறுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick