பூவுளத்தா - தெய்வ மனுஷிகள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம்ம மாலைக்குட்டி இருக்காரே... நல்ல வளமான ஆளு. சொத்து சொகமுனு நெறையக் கெடக்கு. பெரிய சனக்கட்டு. ஊருல பங்காளிகளோட சொத்துத் தகராறு. அதனால எல்லாரையும் ஒதுக்கிட்டு இந்த ஊருக்கு வந்து குடியிருக்காரு. மனுஷனுக்கு இந்தூர்லயும் நல்ல மருவாதி. நல்லது, கெட்டது பண்ணணும்னா யாரும் இவரில்லாம பண்ண மாட்டாக. பொதுக்காரியங்கள்லயும் ஈடுபாடான ஆளு.

மாலைக்குட்டிக்கு ஆறு ஆம்புளைப் பயலுவ. எல்லாம் வலுவான ஆளுக. வம்பு, தும்புன்னு வந்தா ஆறு பயலுகளும் கைகோத்துக்கிட்டு மல்லுக்கு நிப்பானுவ. நாலு தலைமுறைக்குச் சொத்து, தோளுக்குச் சமமா ஆறு ஆம்பளைப் பயலுக இருந்தாலும் மாலைக்குட்டிக்கு ஒரு பெரிய மனக்குறை உண்டு. ஆஸ்திக்கு ஆறு ஆம்பளைப் பசங்களைக் கொடுத்த செங்கிடாக்காரன், ஆசைக்கு ஒரு பொம்பளப் புள்ளையைக் குடுக்கலையே... வீட்டுக்குப் பக்கத்துலேயே செங்கிடாக்காரனுக்குப் பீடம் எடுத்துக் கோயிலு கட்டிக் கும்புட்டாரு மாலைக்குட்டி.  தெனமும் போயி ‘எனக்கொரு பெண் வாரிசுக்கு வரம்குடு சாமி’னு கேக்காத நாளுல்ல. ஒருக்கா, மாலைக்குட்டி குரல் செங்கிடாக்காரனுக்குக் கேட்டிருச்சு.

அந்த தெய்வக்கருணையில பாக்கியத்தா முழுகாம இருந்தா. பத்தாம் மாசம், மலர்ந்த பூ மாதிரி அழகான ஒரு பொம்பளப் புள்ளையப் பெத்தெடுத்தா பாக்கியத்தா. பூமாதிரி இருந்ததால ‘பூவுளத்தா’னு பேரு வெச்சாக. ஆறு அண்ணங்காரனுவளும் உசுருக்கு உசுரா தங்கச்சிய பாத்துக்கிட்டானுவ. ஆயி அப்பனுக்கும் வாழ்க்கையே நிறைவான மாதிரி இருந்துச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick