காதலுக்கு மரியாதை - மினி

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையின் குவியலில் எதையோ துழாவிக் கொண்டிருந்தபோது, அந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. `Love and Love only’ என்ற தலைப்பைப் பார்த்ததும் `எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே!’ என்கிற யோசனை உள்ளுக்குள் ஓடியது. பழுப்பு நிற முதல் பக்கத்தின் மேல் ஓரமாக `மினி’ என எழுதியிருந்தது. கோமாவிலிருந்து சட்டென மீள்வதுபோல எனக்கு எல்லாம் ஞாபகம் வந்தது. சுருள் சுருளாக இருபது வருடங்கள் பின்னோக்கிப் போய் நின்றது. உற்சாகம் மேலிட, புத்தகத்தை மொபைலில் க்ளிக் செய்து விக்னாவுக்கு மெசேஜ் பண்ணினேன்.

`ரியல்ல்லி!’ என்று ரிப்ளை வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick