இந்த அன்பு என்றும் தொடரணும்! - பார்வதி ஹெயின்

செல்லமும் செல்லமும்

பீட்டர் ஹெயின் என்ற பெயரைக் கேட்டாலே மனக்கண்ணில் திரை அதிரும். அனல்பறக்கும் சண்டைக்காட்சிகளை அநாயாசமாக வடிவமைப்பதில் வல்லவர். `அறம்', `குலேபகாவலி' போன்ற பல படங்களையடுத்து, இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், மலையாளத்தில் `ஓடியன்', தெலுங்கில் ஒரு படம், ராஜமெளலி, கே.வி.ஆனந்த் போன்றோரின் படங்கள் என பிஸி ஸ்டன்ட்மேன்.

வீட்டுக்குள் அவர் அன்பான கணவர்...  அக்கறையான அப்பா. கணவரைப் பற்றிக் கேட்டால், கண்களும் நெஞ்சமும் நெகிழ்கின்றன பீட்டர் ஹெயினின் மனைவி பார்வதிக்கு.

``கல்யாணமாகி 22 வருஷங்கள் ஆச்சு. இத்தனை வருஷங்கள்ல ஒருநாள்கூட என்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டதில்லை. அப்பாவா, அண்ணனா, என் உலகமா இருக்கிறவர் அவர்தான்'' - அன்பில் கரைகிற பார்வதி, அழகுக்கலை நிபுணரும்கூட.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick