டீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை! - லிடியா ஆண்ட்ரூஸ்

காதல் கலகலப்பு

பொதிகை டி.வி-யில் நியூஸ் ரீடராக அறிமுகமாகி, தந்தி டி.வி-யில் அரசியல் செய்திகளை நையாண்டியுடன் தொகுத்து வழங்கி பலரின் ஆச்சர்யப் பார்வையை ஈர்த்தவர் ஆண்ட்ரூஸ். பின்னர், விஜய் டி.வி-யின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியை ரியோவுடன் சேர்ந்து கலகலப்புடன் தொகுத்து வழங்கினார். இப்போது, விஜய் டி.வி-யின் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சியை ராமருடன் சேர்ந்து அசத்திவருகிறார். இப்படிக் கலகலப்பு என்றதுமே கண்முன் வரும் முகமாக மாறியிருக்கும் ஆண்ட்ரூஸ், வீட்டில் எப்படி இருப்பார்?

‘`நான் 19 வருஷங்களா டீச்சராகவும், ரெண்டு வருஷங்களா தலைமை ஆசிரியராகவும் இருந்தேன். மூணு வருஷங்களா பிரின்ஸிபால். இப்போ ஒரு வருஷம் பிரேக் எடுத்திருக்கேன்’’ என ஆண்ட்ரூஸின் மனைவி லிடியா அறிமுகம் செய்துகொள்ள, ‘`அப்படியே என்னைப் பற்றியும் கொஞ்சம் நல்லதா சொல்லும்மா’’ என்று கோரிக்கை வைக்கிறார் கணவர் ஆண்ட்ரூஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick