தோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்! - ரைசா வில்சன்

ஸ்டார்

பிக் பாஸ் முடிந்தவுடன் விளம்பரங்கள், திரைப் படங்கள் என பிஸியாக இருக்கும் ரைசாவின் அடுத்த படம் ‘வர்மா’. ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியால் செம ஹாப்பி மோடில் இருந்த ரைசாவிடம் பேசினோம்.

முதல் பட ஷூட்டிங் அனுபவம்?

ஷூட்டிங்னு வந்ததும் நான் முதல்ல விட்டுக்கொடுத்தது என் தூக்கத்தைதான். சீக்கிரமே எழணும், லேட் நைட் வரைக்கும் வேலை பார்க்கணும். கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. இந்தப் படத்தின் இயக்குநர் இளனும் நடிகர் ஹரிஷும் எப்போ பார்த்தாலும் என்னைக் கலாய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. நானும் ஹரிஷும் எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். அதனாலேயே ஹரிஷ் கூட வேலை பார்க்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. ஹரிஷ் ஒரு சீரியஸான பர்சனாலிடியா இருந்தா, நான் ஷூட்டிங் ஸ்பாட்ல எதுவுமே பேசாம ரொம்ப அமைதியா இருந்திருப்பேன். எல்லோரும் ‘நல்ல கெமிஸ்ட்ரி’னு சொல்றாங்களே... எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிந்துணர்வு இருந்ததனாலதான் அது நடந்துச்சு. தவிர, டான்ஸ் கிளாஸ், ஆக்டிங் கிளாஸுக்குச் சேர்ந்து போய் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு வர்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த நொடி வரைக்கும் ரைசா சிங்கிள்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick