அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட் | Letters for Aval Vikatan Readers Experience - Aval Vikatan | அவள் விகடன்

அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்

`சுகப்பிரசவம் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதைவிடுத்து, இரண்டு உயிர்களோடு விளையாடும் விளையாட்டாக அதை மாற்றிவிடக் கூடாது’ என்கிற ஆசிரியரின் வரியைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

- இல.வள்ளிமயில், மதுரை-6

ரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றை ஒவ்வோர் இதழிலும் தொகுத்துத் தரும் ‘14 நாள்கள்’ பகுதி பயனுள்ளது; பாராட்டுக்குரியது; பெண்களுக்குப் பெருமை சேர்ப்பது.

- என்.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18

வள் அரங்கத்தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன மீனாவின் அனுபவப் பாடங்கள் அசத்தல்.

- ராஜி குருசுவாமி, சென்னை-88

‘இரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்’ தலைப்பிட்ட கட்டுரை, வீட்டு உபயோகத்துக்கு மட்டுமல்ல... பணத்துக்கும் வழி செய்யும் என்பது போனஸ் தகவல்.

- மயிலை கோபி, சென்னை-83

`ஒ
ரே பொருள் பல பலகாரங்கள்’ 32 பக்க இணைப்பு... இல்லம்தோறும் இருக்கும் பலகாரப்பிரியர்களுக்கான பொக்கிஷம்.

- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick