அவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது! - நடிகை மீனா | Questions With Dazzling Actress Meena - Aval Vikatan | அவள் விகடன்

அவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது! - நடிகை மீனா

ரஜினி, கமல் - யாருக்கு ஆதரவு?

ஹீரோயின் மீனா... அந்த பிஸியான காலத்தில் எப்படி இருந்தாங்க?

- உ.ஹேமலதா, திருச்சி

பாவம்... ஓய்வுக்காக ரொம்ப ஏங்கின காலகட்டம் அது. 1990-களிலிருந்து தொடர்ச்சியா 15 வருஷங்கள் தென்னிந்திய சினிமாவில் எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் நடிச்சிருக்கேன். ‘நம்பர் ஒன் நடிகை’ங்கிற புகழையும் பார்த்திருக்கேன். ஆனா, அதை அனுபவிச்சு சந்தோஷப்படக்கூட நேரமில்லாம அடுத்த புராஜெக்ட்டுக்கு ஓடிட்டு இருந்தேன். என் கால்ஷீட்டுக்காக சண்டை போட்டவங்க பலர் உண்டு. பண்டிகை டைம்லகூட ரெஸ்ட் கிடைக்காது. நல்ல தூக்கம்னா என்னன்னு தெரியாத நாள்கள்தான் அதிகம்.  

என்னால பொதுவா அதிக சூடு தாங்க முடியாது. ஆந்திராவுல ராஜமுந்திரி கோதாவரி ஆத்துல ஷூட்டிங் நடக்கும். அங்க சுத்தமா தண்ணி இல்லாம, மணல் மட்டும்தான் இருக்கும். சித்திரை வெயில்ல செருப்பு போடாம நடிக்கிறது, டான்ஸ் ஆடுறதுனு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். சூடு தாங்க முடியாம, தண்ணியில டவலை நனைச்சு முகத்தை அடிக்கடி துடைச்சுப்பேன். சில விநாடிகள்ல முகம் உலர்ந்திடும். ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. இப்படிப் போச்சு அந்தக் காலம்.


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick