சமையலறையிலிருந்து சமூக மேம்பாட்டுக்கு! - மு.கருணாநிதி

அன்பின் அடையாளம்

`மடிந்தான் உன் மகன் களத்தில்' என்றான் 
மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க் கிழவி ஒருமுறை
‘காயம் மார்பிலா... முதுகிலா?’ என்றாள்
முதுகிலென்றான்
கிழவி துடித்தனள் இதயம் வெடித்தனள்
வாளை எடுத்தனள்
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்
கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்.


து தி.மு.க தலைவர் கருணாநிதி, கவிஞர் கருணாநிதியாக புறநானூற்றுப் பாடலை இக்கால நடையில் 1945-ம் ஆண்டு எழுதிய கவிதை. புறநானூறு என்றாலே மன்னர்களின் வீரத்தைப் பேசும் என்ற எண்ணத்தை மாற்றி ஒரு தாயின் வீரத்தைப் பதிவு செய்தது இந்தப் பாடல்.

போரில் புறமுதுகிட்டு இறந்த மகனை மீண்டும் வெட்டி எறிய வாளோடு அந்தத் தாய் புறப்பட்டுப்போவதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் போரில் எதிரியின் ஆயுதத்தை நெஞ்சிலேந்திக் காயம்பட்டு மாண்டவனை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அந்தத் தாய்மையின் மனோநிலையில் இருப்பது சுயமரியாதை என்னும் தீ. இந்தத் தீயைப் பெண்களுக்குள் ஏற்றிவைத்ததில் அன்றைய காலகட்டத்தில் கவிஞர் கருணாநிதிக்குப் பெரும்பங்குண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick