லெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்! - கோமதி

நீங்களும் செய்யலாம்

முன்பெல்லாம் திருமண வரவேற்புக்கு வடக்கத்திய பாணியில் சேலை அணிவது வழக்கம். இன்று சேலை காணாமல் போய், லெஹங்கா ஃபேஷனாகிவிட்டது. சேலையைவிடவும் விலை அதிகமான லெஹங்கா. பிரத்யேகமான டிசைனர் கடைகளில்தான் கிடைக்கிறது. இதனாலேயே மணப்பெண்கள் பலருக்கு லெஹங்கா கனவு நனவாவதில்லை. இதற்குத் தீர்வு வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த டெய்லர் கோமதி. லெஹங்கா ஸ்பெஷலிஸ்ட்டான இவர், சாதாரண மக்களுக்கும் சாத்தியமாகிற விலையில் லெஹங்கா தைப்பதில் பிரபலம்.

‘`எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். சின்ன வயசுலேருந்தே டெய்லரிங் பிடிக்கும். ஆனாலும், வீட்டுல அனுமதிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகுதான் அந்த ஆசை நிறைவேறியது. பையன் பிறந்து ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும் நிறைய நேரம் கிடைச்சது. வீட்டுல எங்க எல்லாருடைய டிரஸ்ஸையும் விதவிதமா தைச்சு அழகு பார்ப்பேன். அதைத் தாண்டி யோசிக்க முடியலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick