மாசி - மல்லி | Masi and Malli divine human gods stories - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/08/2018)

மாசி - மல்லி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தெய்வ மனுஷிகள்!

ல்லி அப்பன் வெவசாயி. வீட்டுல ஏகப்பட்ட மாடு கன்னுக. அதுகளைப் பாத்துக்கறதுக்கு ‘வெள்ளான்’னு ஒரு வேலைக்காரனை வெச்சிருந்தார். பய ரொம்ப பொறுப்பான ஆளு. நேர்மையான பயலும்கூட. மல்லி எங்காவது வெளியில போகணுமின்னா கூண்டு வண்டி கட்டி அவன்தான் கூட்டிக்கிட்டுப் போவான். மல்லிக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து வெள்ளான், மல்லி வீடே கதின்னு கிடக்குறான். அவனுக்கு ஆயி அப்பன் யாருன்னு தெரியாது. மல்லிக்கு அவன் மேல ஒரு கரிசனம் உண்டு. நல்லாப் பேசுவா. காயி, கறின்னு கைநிறைய அள்ளி வெச்சு சோறு போடுவா. தன் வீட்டுலயே வளர்ந்ததால புள்ளைக்கு வித்தியாசம் தெரியலே. தன் வீட்டு மனுஷன்ல ஒருத்தனா நெனச்சுக்கிட்டா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க