62 வயது துணிச்சல்காரி! - ஆலியா காலாஃப் சாலே

முகங்கள்

`உலகின் தைரியப் பெண்’ என இராக்கின் ஆலியா காலாஃப் சாலேவுக்கு விருது வழங்கி, அவரை கெளரவித்திருக்கிறது அமெரிக்கா. இதுவும் ஏதோ வழக்கமான விருதுதான் என உதாசீனப்படுத்திவிட முடியாத சாதனைக்குச் சொந்தக்காரர் ஆலியா காலாஃப் சாலே!

2014-ம் ஆண்டில் இராக்கில் நடந்த போரில் கணவன், மகன் மற்றும் மருமகனை இழந்தவர் 62 வயதான ஆலியா காலாஃப் சாலே. ஆனால், இழப்பின் சோகத்தில் வீட்டில் உட்கார்ந்தபடி கண்ணீர் சிந்தாமல், இராக்கியப் படை வீரர்கள் 58 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் அவர். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பார்வையில் படாமல் மூன்று மாதங்கள் 58 பேரையும் பாதுகாத்து, யாருக்கும் தெரியாமல் அவர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தவர் இந்தத் துணிச்சல்காரர்.

2014 ஜூன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அரசுப்படையின் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தைக் கண்மூடித் தாக்கினர். உயிர் தப்பினால் போதும் என்று அருகில் உள்ள ஆற்றில் குதித்து, பாக்தாத்துக்கு தப்பிக்க முயன்றனர் படை வீரர்கள். இரவு நேரம் என்பதால் ஆற்றில் குதித்தவர்கள் கொஞ்சம் தூரம் நீந்திக் கரையேறி ஓடி, ஆலியாவின் விவசாயப் பண்ணையில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அப்படித்தான் 58 வீரர்களுக்கும் அறிமுகமானார் ஆலியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick