குக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்! - கிருத்திகா ராதாகிருஷ்ணன்

அடையாளம்

மிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் திருமதி. அரசு அதிகாரியின் மனைவி என்பதைத் தாண்டி, சமையல்கலை நிபுணர், சின்னத்திரைப் பிரபலம், சமூகசேவகர் என கிருத்திகா ராதாகிருஷ்ணனின் அடையாளங்கள் சுவாரஸ்யமானவை... பலரும் அறியாதவை.

``மருத்துவர்கள் நிறைஞ்ச குடும்பம். அதனால ஆரோக்கியமான சாப்பாடுங்கிறது சின்ன வயசுலேயிருந்தே எங்க லைஃப் ஸ்டைல்ல முக்கியமான விஷயமா இருந்திருக்கு. அந்த வகையில சமையல் ஆர்வமும் தானா வந்தது. மதுரையில எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சேன். படிப்பை முடிச்சதும் கல்யாணமாகிடுச்சு.

சமையல் கலைப் புத்தகம் எழுதணும்கிற ரொம்ப நாள் ஆசையை ஊக்கப்படுத்தி, எழுத வெச்சவர் என் கணவர். 2000-த்துல `இன் டு தி வேர்ல்டு ஆஃப் எக்ஸ்பெர்ட் குக்கிங்' என்ற பெயர்ல முதல் புத்தகத்தை வெளியிட்டோம். சன் நியூஸ் சேனலில் ஏவி.எம் புரொடெக்‌ஷன்ஸின் `மங்கையர் சாய்ஸ்' நிகழ்ச்சியில பங்கேற்கிற வாய்ப்பு கிடைச்சது. அதன்மூலமா என் பெயர் பிரபலமானது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick