கனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல்! - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்

ஆனந்த நர்த்தனம்

`ஜூனியர்களே... நீங்கள் ஆறு முதல் 15 வயதுக்குட்பட்டவரா? உங்களுடைய இசைத்திறனை இந்த உலகம் கொண்டாட வேண்டுமா? இதோ ஆரம்பமாகப்போகிறது... சூப்பர் சிங்கர் ஜூனியர் 6. உங்கள் விஜய்யில் தவறாமல் பாருங்கள்!’

‘பிக்பாஸ்... தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜய்யில்!’

- விஜய் தொலைக்காட்சி அறிவிப்புகளில் அதிரும் இந்த வசீகரக் குரலுக்குச் சொந்தக் காரர் கோபி நாயர். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டி.வி நிகழ்ச்சி அறிவிப்புகளுக்குத் தனது வாய்ஸ்ஓவர் மூலம் உயிரூட்டி வரும் குரல் கலைஞர். ‘மகாபாரதம்’ சீரியலில் சகுனி கதாபாத்திரத்துக்கே தனிச்சிறப்பு சேர்க்கும் வகையில் ‘அன்பு மருமகனே’ என்று தன் டப்பிங் மாடுலேஷனில் அசத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், ‘இவர்தான் அவர்’ என்று மேடையில் அவர் குரலுடன் அவர் முகமும் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தன் நெடிய பயணத்துக்கான முதல் வெளிச்சத்தைப் பெற்றார். இயக்குநர், நடிகர் கனவுகளோடு கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்த இவரது வீட்டின் பெயர்ப்பலகையில் ‘வீரலட்சுமி’ வரவேற்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick