“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா | Interview With Costume Designer Archa Mehta - Aval Vikatan | அவள் விகடன்

“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க!” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா

மனதுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

ப்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா. “ஷ்ரேயா, நயன்தாரா, கேத்ரின் தெரஸா, ஹன்சிகா எனப் பல முன்னணி நடிகைகளோடு வேலை பார்த்துட்டேன். அடுத்து ரஜினி சார், கமல் சாருக்குத்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணணும்” எனப் பூரிக்கும் அர்ச்சா மெஹ்தாவின் முதல் சினிமா என்ட்ரி, இந்தியில் வெளியான ‘ராம் லீலா’.

ஃபேஷன் டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுத்த காரணம்?


சின்ன வயசுல இருந்து ஃபேஷன்மேல பெரிய ஈடுபாடு. விதவிதமான டிரஸ் போடணும், சின்ட்ரெல்லா மாதிரி ஆகணும்னு பல கனவுகள். ‘இந்தூர்ல (மத்தியப்பிரதேசம்) பொறந்து வளர்ந்த பொண்ணு, எப்படி சினிமாவுக்குப் போகலாம்? அதெல்லாம் தப்பு’னு சுத்தி இருக்கிறவங்க பேச ஆரம்பிச்சாங்க. வீட்டிலும் டிஸ்கரேஜ் பண்ணாங்க. ஆனா, நான் என் முடிவுல தெளிவா இருந்தேன். பள்ளிப் படிப்பை முடிச்சதும் அடம்பிடிச்சு NIIFT-ல ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். பிறகு, லண்டன்ல முதுகலைப் பட்டம் வாங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick