அன்பு மட்டுமே கைம்மாறு! - விஷாலா கிஷோர்

விவசாயி

யற்கை விவசாயத்தை நேசிப்பவர் களைத் தங்கள் ‘பஃபல்லோ பேக்’ பண்ணை யின் கதவுகளை அகலத் திறந்துவைத்து அன்புடன் வரவேற்கிறார்கள் நடிகர் கிஷோரும் அவர் மனைவி விஷாலாவும். பெங்களூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரியப்பனதொட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இவர்களின் இயற்கை வசிப்பிடம்.

“எனக்குத் தமிழ்நாடு பூர்வீகம் என்றாலும், கர்நாடகாவுலதான் பிறந்து வளர்ந்தேன். அவருக்குக் கர்நாடகா பூர்வீகம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரெண்டு பேரும் பி.எஸ்ஸி விலங்கியல் படிச்சோம். யெஸ்... அவர் எனக்கு காலேஜ் சீனியர். நாங்க படிச்ச ‘நேஷனல் காலேஜ்’ல இருந்த தியேட்டர் கிளப்ல பயிற்சிபெற்ற நிறைய பேர் நாடகம், சினிமா ஆர்ட்டிஸ்ட்ஸ்னு பிரபலமடைந்திருக்காங்க. ஒரு டிராமாவில் சேர்ந்து நடிக்கும்போதுதான் இருவரும் அறிமுகமானோம்; காதலிச்சோம்’’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார் விஷாலா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick