கொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்! - மெனுராணி செல்லம்

லவ் ஃபுட்

ரு வீட்டில், வாரத்தில் எத்தனை நாள்தான் மூன்று வேளையும் சமையல் நடக்கும்? இதற்கு, சுமாரான ஹோட்டல் தொடங்கி கையேந்தி பவன் வரை எல்லா நாள்களிலும் காண்கிற கூட்டமே பதில் சொல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, மேல்வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை; விதவிதமாகச் சமைத்துத் தரத் தெரிவதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, இவற்றோடு நேரமின்மை, களைப்பு எனக் கூடுதலாக வேறு சில பிரச்னைகள். ஆக, வாரத்தின் பல நாள்களுக்கு விடுமுறை விடப்படும் இடமாக இருக்கிறது `சமையலறை'. தவிர, பலருக்கும் அலுத்து, சலித்துப்போகிற விஷயமாகவும் இருக்கிறது சமையல்.

சமையல் தனக்கு அடிக்‌ஷன் என்கிறார் மெனுராணி செல்லம். அதுவே தன்னுடைய `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றும் வியப்பூட்டுகிறார். சமையல் கலைப் பயிற்சியில் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் செல்லத்திடம் அதே ஆர்வம்... அதே உற்சாகம்!

``வாழ்வின் எல்லா துயரங்களிலிருந்தும் என்னை மீட்டெடுத்தது சமையல்தான். சமையல் கலை வகுப்புகள் எடுப்பதன் மூலம், தினம் தினம் பல்வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது; அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்களின் கதைகளைக் கேட்கும்போதுதான் வாழ்க்கையில் என்னைவிடவும் கஷ்டப்படுகிற பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. பல தருணங்களில் அவர்கள் மூலம் என் பிரச்னைகளுக்குத் தீர்வும் தெளிவும் கிடைத்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick