"அன்புக்கு எதுவும் தடையில்லை!" - அங்கிதா மிலிந்த் சோமன் | Milind Soman celebrates love and life with Ankita Konwar - Aval Vikatan | அவள் விகடன்

"அன்புக்கு எதுவும் தடையில்லை!" - அங்கிதா மிலிந்த் சோமன்

உலகெல்லாம் உலா

லர்ஸ் டி.வி-யுடன் இணைந்து `பிங்கத்தான்' அமைப்பு நடத்திய மாரத்தானுக் காக சென்னை வந்திருந்தார் மிலிந்த் சோமனின் காதல் மனைவி அங்கிதா. மிலிந்தின் கைகோத்தபடி நிழலாகத் தொடர்கிற அங்கிதாவின் கண்களில் அவ்வளவு காதல்!

பாலிவுட் நடிகரும் ஃபிட்னெஸ் ஆர்வலருமான மிலிந்த் சோமனின் மனைவி என்பதைத் தாண்டி, அங்கிதாவுக்கு வேறு அடையாளங்களும் இருக்கின்றன. கவிஞர், பயண ஆர்வலர், கிடார் கலைஞர்... இப்படி!

``எனக்கு டிராவலராகணும்னு ஆசை. சின்ன வயசுல மார்கோபோலோ, ரோல்டு அமுண்ட்சென் மாதிரியானவர்களின் பயண அனுபவங்களைப் பாடமா படிச்சப்பவே எனக்குள்ளேயும் அந்தக் காதல் வந்திருச்சு. பயணம், உங்க அறிவை வளர்க்கும்; உலகைத் திறந்துகாட்டும்; உங்கள் பார்வையை விசாலப்படுத்தும். எனக்கு இந்த உலகம் முழுக்கச் சுற்றணும்னு ஆசை. இங்கே  இருக்கிற அத்தனை கலாசாரங்களையும் தெரிஞ்சுக்கணும்.

கல்யாணத்துக்கு முன்னாடி `ஏர் ஏஷியா'வுல வேலைபார்த்தேன். மிலிந்த்கூட நேரம் செலவழிக்கிறது மட்டும்தான் இப்போதைக்கு என் முக்கியமான வேலை. இன்னும் நிறைய டிராவல் பண்ண முடியுது. கல்யாணத்துக்குப் பிறகு லைஃப் இன்னும் கலர்ஃபுல்லா மாறியிருக்கு'' - கணவரைப் பார்த்துக் கண்ணடித்தபடி சிரித்தவரிடம் காதல் கதையைப் பற்றிக் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick