கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

ன் சித்தி மகள் பாமா, “அக்கா, ரொம்ப தான் டபாய்க்கிறீங்க. செல்வநிலை, கரன்ட் அக்கவுன்ட் என்றெல்லாம் சொல்லிட்டு, முதலீட்டு ரகசியங்களைச் சொல்லி நம்மைத் தேற்றிவிடுவீர்கள் என்று பார்த்தால், சிக்கனம், பட்ஜெட் என்று லெக்சர் அடிக்கிறீங்களே!'' என்று நொடித்தாள்.

“அட, அசடே! செல்வநிலைக்கு இவை யெல்லாம் மிகவும் அவசியம். ஊட்டிக்கு காரில் டூர் போவதென்றால், முதலில் பிரேக், டயர், ஸ்டியரிங், வீல் என்று எல்லாவற்றையும் சரிபார்ப்போம் இல்லையா? நாலு நாள்கள் பயணத்துக்கே இப்படியென்றால், ஆயுள் முழுக்கப் பயன்தரக்கூடிய செல்வநிலைப் பயணத்துக்கு எத்தனை விஷயங்களைத் தயார்படுத்த வேண்டும்? அதற்காகத்தான் இந்த அத்தியாயங்கள்” என்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick