இந்த உலகை உடைத்துப் போட வேண்டும்! - சில்வியா பான்கிரஸ்ட்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்

ன் சில்வியாவின் சிலை இங்கே இல்லை? பிரிட்டனின் மக்களவை, பிரபுக்கள் அவை இரண்டும் தொட்டுக்கொள்ளும் இடத்தில், வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்கு அருகில் உள்ள விக்டோரியா கோபுரப் பூங்காவின் நுழைவாயிலில் இரு சிலைகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது, எமிலின் பான்கிரஸ்டின் சிலை. இரண்டாவது அவருடைய மூத்த மகள் கிறிஸ்டபெல் பான்கிரஸ்டின் சிலை. மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இரு பெரும் ஆளுமைகள் என்னும் வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க ஓரிடத்தில் இருவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது சரியே. அதே எமிலினின் இரண்டாவது மகளும் கிறிஸ்டபெலின் தங்கையுமான சில்வியாவுக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும்தானே? தாயையும் சகோதரியையும்விட பல அடிகள் முன்னோக்கிப் பாய்ந்தவரல்லவா அவர்?

சில்வியாவுக்கும் இங்கு இடம் ஒதுக்க வேண்டும் என்னும் கோரிக்கையைச் சிலர் சமீபத்தில் முன்வைத்தபோது, பிரபுக்களின் சபை மறுத்துவிட்டது. `இப்போதைய சமூக அரசியலமைப்பு முறையானதல்ல. அதைச் சீர்திருத்த வேண்டும்' என்றனர் எமிலியும் கிறிஸ்டபெலும். `காலமாற்றத்துக்கு ஏற்ப, அவர்களை அரவணைத்துக்கொள்வதில் ஒருவருக்கும் தயக்கமில்லை. சீர்திருத்தம் உதவாது, தேவை அடிப்படை மாற்றம். தற்போதுள்ள அமைப்பு முற்றாக அகற்றப்பட்டால்தான் நமக்கான மாற்றை அங்கே கட்டியெழுப்ப முடியும்' என்றார் சில்வியா. இந்த முழக்கம் அன்று மட்டுமல்ல, இன்றும் பலருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. `புரட்சி ஒன்று ஏற்படும். அப்போது இந்தக் கட்டடம் இடித்துத் தள்ளப்படும்' என்ற சில்வியாவின் சிலையை அதே இடத்தில் அமைக்க பிரபுக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick