ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்

தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் பல வழி களில் வந்தாலும் செலவு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் உழைப்புக்குரிய  அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.


ரிஷபம் 

எதிர்பாராத பணவரவு உண்டு. புதிதாக வீடு வாங்குவீர்கள். வி.ஐ.பி-க் களின் நட்பு கிடைக்கும். கணவரின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவார்கள். பயணங்களால் பயனடை வீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில்  நீண்ட நாள்களாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்னைகள் வந்து விலகும்.

அதிரடியான முன்னேற்றங்களை அடைவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick