அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி | Cute interview with cute sisters - Aval Vikatan | அவள் விகடன்

அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

சிஸ்டர்ஸ்

டி.டி, பி.டி சிஸ்டர்ஸுக்கு அறிமுகம் அவசியமில்லை. டி.டி வாயைத் திறந்தால் அதிரடி, சரவெடி என்றால் பி.டி அமைதி... அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி டைப்!

‘`நான் வீட்டுக்கு மூத்த பெண். அதனால எனக்கும் டி.டி-க்கும் சண்டையே வந்ததில்லை. டி.டி-யும் எங்க தம்பி சுதர்ஷனும்தான் ஒரு செட். நிறைய அடிச்சுப்பாங்க. அவங்க சண்டையை விலக்கறதுதான் என் வேலை...’’ என்கிற ப்ரியதர்ஷினிதான் முதலில் மீடியாவில் பிரபலமானவர்.

``மீடியாவுக்கு வந்தபோது நான் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டிருந்தேன். டி.டி அப்போ அஞ்சாவது படிச்சிட்டிருந்தா. நான் ஆங்கரான ஒரு வருஷத்துல டி.டி-யும் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு ஆங்கர் ஆயிட்டா. ஒன்பதாவது படிச்சிட்டிருந்தபோதே விஜய் டி.வி-க்கு வந்துட்டா. சின்ன வயசுலேயே அவளுக்குனு தனி ஸ்டைல் இருந்தது. இப்போ சினிமா, டி.வி-னு அவ நிறைய பண்ணிட்டிருக்கா. எங்கே போனாலும் ‘நீங்க டி.டி-யோட சிஸ்டர்தானே’னு கேட்கறாங்க. அதைவிடவா எனக்குப் பெரிய பப்ளிசிட்டி வேணும்!’’ - தங்கை புகழ் பாடுகிற அக்காவுக்கு, மீடியாவில் இது 25-வது வருடம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick